• Jul 25 2025

பயங்கரமாக இருக்கப் போகுது... இன்னைக்கு செம சண்டைதான் வரும்... பரபரப்பில் போட்டியாளர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இந்நிகழ்வானது தற்போது 4வாரங்களை வெற்றிகரமாக கடந்து 5ஆவது வாரத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றது.

இதில் போட்டியாளர்களுக்குக்கிடையில் எப்போ பார்த்தாலும் சண்டையும், சச்சரவுகளும், வாய்க்கலப்புக்களுமே இடம்பெறுவது வழமையாகி விட்டது.


இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்களை ஒருவருக்கொருவர் கோர்த்துவிடும் முயற்சியில் இரங்கி இருக்கின்றார். அதாவது பிக்பாஸ் வீடானது 2ஸ்வீட்ஸ் தொழிற்சாலையாக மாறுகின்றது. அதில் அமுதவாணன் தலைமையிலான கடையின் பெயர் "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா". அதேபோன்று அசீம் தலைமையிலான கடையின் பெயர் "தேனடை". 

இந்த தொழிற்சாலை ஆனது 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அதில் பலகாரங்களை செய்து ஆர்டரை அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பொருட்கள், மற்றும் கல்லாப்பெட்டியை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனவும் கூறப்படுகின்றது. 

இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக இருக்கும் எனவும், செம சண்டை வரும் எனவும் ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர். இவர்கள் கூறுவது போன்று இன்றைய தினம் இவர்களுக்கிடையில் சண்டை வருமா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement