• Jul 25 2025

அச்சு அசல் ஷிவாங்கி போலவே பேசி அசத்திய குக்வித் கோமாளி மோனிஷா.. வெளியான ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. 


இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிரடித் திருப்பங்கள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதுவரை காலமும் கோமாளியாக களமிறங்கிய ஷிவானி இந்த சீசனில் குக்காக பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கோமாளியாக கலந்து கொண்டுள்ள மோனிஷா அச்சு அசல் ஷிவாங்கி போலவே பேசி அசத்துகின்றார். இதனைப் பார்த்த ஷிவாங்கி "அப்பிடியே என்னை மாதிரியே பண்ணுறா" எனக் கூறி ஆச்சர்யத்தில் மூழ்கி நிற்கின்றார்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement