• Jul 24 2025

'பதான்' படத்திற்கு கிளம்பும் எதிர்ப்புக்கள்... தேவையற்ற கருத்துக்களை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுரை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனன் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. இப்படமானது இந்த ஆண்டு ஜனவரியில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. 

இதில் 'பேஷாராம் ரங்' என்ற பாடலானது சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது அதில் நடித்துள்ள தீபிகா படுகோன் காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. அதுமட்டுமல்லாது பாடலில் படுகவர்ச்சியுடன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.


மேலும் காவி நிறத்திலான பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் வெளியிடப்பட்டன. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதனால் இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பதான் சர்ச்சை ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. 

இவ்வாறாக தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி பிகினி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியது என்று அரசியல்வாதிகள் மற்றும் பல மதத் தலைவர்கள் பேசிய சர்ச்சையை பேச்சுக்களை ஒவ்வொரு வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் வெளியிட்டன. இதன் காரணமாக படத்திற்கு பெரும் புறக்கணிப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் குஜராத் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் வந்ததால் அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது திரைப்படங்கள் குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி பா.ஜ.க தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது நாடு தழுவிய தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது நமக்குத் தெரியும். சில அரசியல்வாதிகளின் திரைப்பட அறிக்கைகளால் மத்திய மந்திரிகளின் கடின உழைப்பு வீணாவதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை கருத்துக்கள் செய்தி சேனல்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார். இதனால் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement