• Jul 25 2025

குஷி பட விஜய்தேவர்கொண்டாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பப்லு- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகர், குணச்சித்திர பாத்திரம், வில்லன் என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் பப்பு பிரித்விராஜ் . 56 வயதாகும் பப்லு தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்திருந்த கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அதே போல் ராதிகாவின் செல்வி, வாணி ராணி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இதுவரை  200 படங்களுக்கு மேல் நடித்துள்ள பப்லு அண்மையில் 2வது திருமணம் சர்ச்சையில் சிக்கினார்.


இவர் சமீபத்தில் 23 வயதே ஆன ஷீட்டல் என்ற இளம் பெண்ணை மறுமணம் செய்தார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் பப்லு.படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடிக்கும் பப்லுவிடம் கிட்டத்தட்ட ரூ. 5 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் பப்லு தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது குஷி பட விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா போல பெட்ரூமில் துாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement