• Jul 25 2025

சொந்த பந்தங்களின் உறவை எடுத்துக் காட்டும் புதுவசந்தம் சீரியல்- வெளியாகிய புதிய சீரியலின் ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களைப் போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி மவுஸ் காணப்படுகின்றது. அந்த வகையில் 90களில் இருந்து தற்பொீது வரை பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவதில் சன்டிவி முக்கிய இடம் வகிக்கின்றது.

மேலும் சமீபகாலமாக டி.ஆர் பியில் பின்னுக்கு நிற்கும் சீரியல்கள் எல்லாம் முடிவுக்கு வருவதோடு பல புதிய சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகிவருகின்றது. 

அவ்வாறு சில மாதங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட சீரியல்கள் தான் இலக்கியா, இனியா, மிஸ்டர் மனைவி போன்றனவாகும். இந்த சீரியல்கள் தற்பொழுது ரசிகர்களின் பேவரிட் சீரியல்களாகவும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய சீரியலுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. புதுவசந்தம் என்று பெயர் வைக்கப்பட்ட இந்த சீரியலானது கூட்டுக்குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பப்படவுள்ளது என்றும் இதில் சோனியா சுரேஸ் ,ராகுல் ரவி ஆகியோர் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement