• Jul 23 2025

கன்னித்தீவு பொண்ணா பாடலுக்கு... குயின்ஷி கொடுத்த ரியாக்ஷன்... விழுந்து விழுந்து சிரித்த பிக்பாஸ் பிரபலங்கள்... ஸ்டார்ட் மியூசிக்-4 ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.

இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் பிக்பாஸ் சீசன் 6 இன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் "கன்னித்தீவு பொண்ணா.." பாடல் ஒலிக்க விடப்படுகின்றது.


அதற்கு நிவாஷினியும், குயின்சியும் பர்போமன்ஸ் பண்ணி பாடலைக் கண்டு பிடிக்க உதவுகின்றனர். அதில் குயின்சி கன்னித்தீவு பொண்ணா... பாடலை "தங்கச்சி உன் பொண்ணா.." எனத் தவறுதலாக புரிந்து கொண்டு சைகை செய்கிறார். அதனைப் பார்த்து அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement