• Jul 25 2025

திடீரென பெங்கி எழுந்த ரச்சிதா..? அரண்ட ஹவுஸ்மேட்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான  இந்த நிகழ்ச்சியானது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் சொர்க்கவாசிகளாகவும், சிலர் நரகவாசிகளாகவும் உள்ளார்கள் என்று புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.ஏனைய டாஸ்க் போலவே இதுவும் சண்டை, கோபம், அழுகை என ரொம்பவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், ரச்சிதா கோபம் கொண்டது தொடர்பான விஷயம், தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமான நாள் முதல் போட்டியாளராக களமிறங்கி உள்ள ரச்சிதா, மிகவும் நிதானமாக அதே வேளையில் அனைவருடனும் பக்குவமாக தான் பேசி வருகிறார். பொதுவாக, அவர் கோபப்படுவது என்பது அரிதாக தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பார்க்கவும் முடிந்திருந்தது.

எனினும் சமீபத்தில் கூட, கமல்ஹாசன் முன்னிலையில், சக போட்டியாளர்கள் அனைவரும் 60 நாளாகியும் ரச்சிதா தனது உண்மையான முகத்தை வெளியே காண்பிக்கவில்லை என கூறியிருந்தனர். அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்த சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் டாஸ்க்கில் ரச்சிதா, நரகவாசிகள் அணியில் இருந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில், சிறை ஒன்றிற்குள் அவர் அடைபட்டிருக்க, தனலட்சுமி மற்றும் ஷிவின் உள்ளிட்டோர் அங்கே நிற்கின்றனர். எனினும் இதனையடுத்து, ஆவேசமாக வெளியே வரும் ரச்சிதா, கால்களை கொண்டு வேகமாக சிறைக்கதவை உதைத்து எறிந்த படி வெளியேறி நடந்து செல்கிறார். அத்தோடு வெளியே வரும் போது, "எப்படி பூட்டுனீங்க?" என கோபத்துடன் பேசிக் கொண்டே ரச்சிதா கடந்து செல்வதும் தெரிகிறது.


Advertisement

Advertisement