• Jul 25 2025

இந்தியாவின் முக்கிய பிரபலத்துடன் இணைந்து புதுவருடத்தை கொண்டாடிய ராதிகா- சரத்குமார் எங்க மேடம்- கேள்வி கேட்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலந்து கட்டி நடித்து, தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ராதிகா. இவரின் குடும்பமே கலை குடும்பம் என சொல்லலாம், இவருடைய அப்பா, எம்.ஆர்.ராதாவில் தொடங்கி, அண்ணன் ராதாரவி, தங்கை நிரோஷா, கணவர் சரத்குமார் என அனைவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் தான்.

ராதிகா கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இது தவிர தற்பொழுது இவர் விஜய்யின் அப்பா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ள கிழக்கு வாசல் என்னும் சீரியலை தனது ராடன் கம்பனியின் மூலமாக தயாரித்து வழங்கவும் உள்ளார்.


மேலும் இன்று புது வருடம் என்பதால் பிரபலங்கள் யாவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். எனவே ராதிகா டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளதோடு அவருடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடியதாகவும் பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement