• Jul 25 2025

கால் முறிந்த எதிர்நீச்சல் சீரியல் கனிகாவிடம் நலம் விசாரித்த ராதிகா- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த நடிகை தான் கனிகா.இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஈஸ்வரி என்னும் சீரியலில் நடித் வருகின்றார். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தொடர்ந்து தொடர்ந்து சீரியல் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்


இந்நிலையில் தான் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் தனக்கு கால் எலும்பு முறிந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

 அந்த பதிவில் “ஒரு வாரம் முடிந்தது இன்னமும் 5 வாரங்கள் செல்ல வேண்டியது உள்ளது. நான் தற்போது புதிய பூட்ஸ் உடன் நடக்க கற்றுக்கொண்டு வருகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.


கனிகாவின் இந்த புகைப்படத்தை கண்டு நலம் விசாரித்துள்ள ராதிகா ‘என்ன ஆனது’ என்று கேட்டு இருக்கிறார். இதற்கு கனிகா ‘கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, ‘கணுக்காலில் தசையிலும் அடிபட்டு இருக்கிறது’ என்று கூறியுள்ளார். நடிகை கனிகா போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அடிபட்ட கால் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement