• Jul 25 2025

கோபி வராததால் பதற்றத்தில் இருக்கும் ராதிகா- போலிஸிடம் வசமாக சிக்கிய பாக்கியா- இன்றைய எப்பிஷோட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி மற்றும் ஜெனி என மூவரும் பைக்கில் மண்டபத்திற்கு சென்று கொண்டிருக்க வழியில் போலீஸிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

செல்வி எதையோ உளர பாக்கியா ஜெனி ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்புகிறார் பாக்யா. பிறகு மூவரும் மண்டபத்திற்கு வந்து மேனேஜரை சந்தித்து சமைக்க கிச்சனுக்கு செல்கின்றனர்.


அடுத்ததாக கிச்சனில் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருக்க செழியன் ஜெனிக்கு போன் போட்டு உடனே நீ வீட்டுக்கு வரணும் என சத்தம் போட பாக்கியா ஜெனியை அனுப்பி வைத்து விடுகிறார். செல்வியிடம் கூட்டிச் சென்று ஆட்டோ ஏற்றி விடுமாறு கூறுகிறார்.


இந்த பக்கம் ராதிகா வீட்டில் எல்லோரும் கோபி வராததால் பதற்றமாக இருக்க பிறகு கோபி வீட்டுக்கு வந்ததும் என்னாச்சு என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறுகிறார். ராதிகாவின் அம்மா உங்க அப்பா நேரா இங்க தான் வருவாரு இங்க வந்து தான் சண்டை போடுவாரு. அவர் வரும்போது நாம யாரும் வீட்ல இருக்க கூடாது. அதுக்குள்ள மண்டபத்துக்கு கிளம்பி போயிடனும் என முடிவெடுக்கின்றனர்.

உள்ளே வரும் போது பாக்யா அங்கிருந்த மணமகன், மணமகள் பெயரை படிக்க முயற்சி செய்கிறார். ஆங்கிலத்தில் இருப்பதால் தட்டி தடுமாறி கோபிநாத் என்ற பெயரை படித்து முடிக்க இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement