• Jul 26 2025

இலங்கையில் குடும்பத்துடன் குத்தாட்டம் போடும் ராதிகா- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராதிகா.எம்.ஆர். ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.ரஜினி கமல் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனை அடுத்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.காமெடி, போல்டான கதை என அசத்தி வருகின்றார்.


வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ராதிகாவின் பங்கு அதிகளவில் உள்ளது. ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் மிகவும் ஹிட்டான சீரியல்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.இறுதியாக அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லவ் டுடே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் தங்களது உறவினர் திருமணத்திற்காக நடிகை ராதிகா குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். அங்கு தனது மகன், கணவர், மணமக்கள் என அனைவருடனும் குத்தாட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement