• Sep 13 2025

நடேசன் எடுத்த முடிவிற்கு சம்மதித்த கோதை... கோபத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிய ராகினி... அர்ஜுனிற்கு காத்திருந்த அதிர்ச்சி... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே இருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் நடேசன் தமது 60-ஆவது கல்யாணத்திற்குத் தமிழையும் வர சொல்லலாமா எனக் கோதையிடம் கேட்கின்றார். அதற்கு கோதை அதெல்லாம்  சரிப்பட்டு வராது என்கிறார்.


பதிலுக்கு நடேசன் மூத்த மகளும் மருமகனும் இல்லாமல் இந்த பங்ஷன் பண்ணினால் ஊர் நம்மள என்ன சொல்லும்..? எனக்கு அவங்கள கூப்பிடணும் என்று ரொம்ப ஆசையாய் இருக்கு" என்கிறார். பின்னர் கோதையும் சம்மதிக்கிறார்.


இதனை ராகினியிடம் தெரிவிக்கின்றனர். அதற்கு ராகினி "அந்த தமிழையும் சரஸ்வதியையும் நீங்க கூப்பிடுறதாக இருந்தால் நாங்க இங்க இருக்க மாட்டோம்" எனக் கூறி அர்ஜுனையும் இழுத்துக் கொண்டு செல்கின்றார். கோதை அவர்களை தடுத்து நிறுத்துகின்றார். 


பதிலுக்கு ராகினி கத்துகின்றார். பின்னர் மயக்கம் போட்டு கீழே விழுகின்றார். இதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைகின்றார். இந்த இரண்டு உயிரும் உங்களுக்கு முக்கியமில்லையா..? என கோதையிடம் அங்கிருந்தவர்கள் கேட்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement