• Jul 24 2025

திருமண பந்தத்தில் இணைந்த raja-rani-2 சீரியல் நடிகை- அடடே.... வெளியாகிய தாலிகட்டும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை தொடர்கள் அனைவரின் வீட்டிலும் ஆட்சி செய்து வருகிறது, மக்களின் கவனங்களை ஈர்க்க பல சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு ஒவ்வொரு சீரியலாக களமிறக்கி வருகின்றது. 

அந்த வகையில் விஜய் டிவியில் அண்மையில் முடிவடைந்த சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2.  இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து இருந்தனர். பின்னர் ஆல்யா விலகியதை அடுத்து இரண்டு ஹீரோயின்கள் கதாநாயகிகளாக நடித்து வந்தனர்.


இதனால் அடிக்கடி இந்த சீரியலில் கதாநாயகி மாற்றப்பட்டதால் டிஆர்பியிலும் இந்த சீரியல் பின்னுக்குச் சென்றது. இதனால் தான் சீரியல் நிறுத்தப்பட்டது. இந்த சீரியலில்  ஜெனி என்ற ரோலில் நடித்து இருந்தவர் சங்கீதா. 

இந்த சீரியலில் அவரது ரோலுக்கு நல்ல முக்கியத்துவம் இருந்தது.தற்போது நடிகை சங்கீதாவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement