• Jul 24 2025

குழந்தையின் காதணி விழாவை கொண்டாடிய ராஜா ராணி சீரியல் நடிகை ஸ்ரீதேவி

stella / 3 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி புதுகோட்டையிலிருந்து சரவணன் படத்தில் அறிமுகமானார். பின்னர் சின்னத்திரைகளில் சீரியல் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து கஸ்தூரி, இளவரசி, தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானார். ரசிகர்கள் பலரையும் ஈர்த்து உள்ளார். ஆனால் மற்றைய சீரியலை காட்டிலும் விஜய் டிவி இல் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் தான் இவருக்கு பெரிய ரீச்சை பெற்று கொடுத்தது.

இந்த சீரியலில் வில்லியாக கலக்கி இருப்பார். இந்த சீரியல் மூலம் நெகட்டிவ் ரோலில் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பின்னர் 2019-இல் புகைப்படக் கலைஞர் அஷோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-இல் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

இதனால் சின்னத்திரையிலிருந்து பிரேக் எடுத்து குழந்தை பிறந்தவுடன் உடல் எடையை குறைத்து மீண்டும் மாஸ் என்ரி கொடுத்தார். தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ரீதேவி 2 தினங்களுக்கு முன்பு தன்னுடைய செல்ல மக்களின் காதணி விழாவை சிறப்பாக கொண்டாடினார். வீட்டில் சிம்பிளாக செய்த இந்த விழாவுக்கு ஸ்ரீதேவி சின்னத்திரை பிரபலங்களை அழைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement