• Jul 26 2025

ராஜமௌலியின் உடலில் இப்படி ஒரு பிரச்சினையா.. பிரபல நடிகை கூறிய தகவல்... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் உச்ச இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் ராஜமௌலி. அந்தவகையில் அவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படமானது ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.


மேலும் RRR படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் கோல்டன் க்ளோப் விருதுகளில் இரண்டு முக்கிய பிரிவுகளில் RRR படம் தேர்வாகி இருக்கிறது. அத்தோடு RRR படத்தில் ராம் சரணுக்கு அம்மா ரோலில் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ஸ்ரேயா சரண் கூறிய ஒரு விடயமானது தற்போது அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. அதாவது "ராஜமௌலி அதிகமாக கஷ்டப்பட்டு தான் RRR படத்தை எடுத்தார், அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது" என தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாது "அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது ராஜமௌலிக்கு ஆஸ்துமா அட்டாக் வந்தது, ஆனாலும் அவர் ஷூட்டிங் செய்தார்" எனவும் அவர் பற்றிப் பெருமையாக ஸ்ரேயா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement