• Jul 25 2025

உலக அளவில் கெத்து காட்டும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’...அதுவும் இந்த விருதிற்கா..வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பின்னர் ராஜமவுலி இயக்கிய படம் தான் இரத்தம் ரணம் ரெளத்திரம். சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்படும் இப்படத்தில் நாயகர்களாக ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் சூப்பராக நடித்திருந்தனர்.மேலும்  இதில் ராம்சரண் சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர். கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்தனர். இரு சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ராஜமவுலி.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகைகள் ஆலியா பட், ஷ்ரேயா சரண், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியது.

அத்தோடு அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.எனினும்  அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜப்பானில் ரிலீசாகி அங்கும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. மேலும் இது ஒருபுறம் இருக்க இப்படத்திற்கு ஆஸ்கார் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.


இவ்வாறுஇருக்கையில், ஆஸ்கருக்கு நிகரான உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வருகிற ஜனவரி மாதம் 10-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு பாடல்) ஆகிய இரு பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement