• Jul 24 2025

ஆட்டம் கண்ட லியோ படக்குழு- நா ரெடி தான் பாடலுக்கு எதிராக டுவிட் போட்ட ராஜேஸ்வரி- கடுப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்தப் படத்தில் இடம் பெறும் லிரிக்கல் வீடியோ ஜூன் மாதம் 22ம் தேதி வெளியானது. அனிரூத் இசையில் உருவான இப்பாடலை விஜய்யுடன் சேர்ந்து பிக்பாஸ் அசல் கோலறும் பாடியிருந்தார்.

இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.நா ரெடி பாடலுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனரும், தலைவருமான ராஜேஸ்வரி பிரியா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது,


இது பொறுக்கித்தனமான பாட்டு. இது ஒரு பாடலா?. இது மாதிரியான கீழ்த்தரமான வரிகளை பாட விஜய் அவர்களுக்கு எப்படி மனசு வந்துச்சு. இதன் மூலம் ஒரு இளைஞனோ, பள்ளி மாணவனோ வீணாப் போனா விஜய் பொறுப்பேற்பாரா?. நீங்கள் நல்லா கல்லாகட்டிட்டு போயிடுவீங்க. கோடிக்கணக்கில் வாங்கிட்டுப் போயிடுவீங்க. ஆனால் இங்கே சமூகம் சீரழிகிறது.

மாணவர்களை சந்தித்தீர்களே. அந்த அரங்கில் இந்த பாடலை பதிவிட முடியுமா?. சிகரெட் (Tobacco Lobby) நிறுவனங்களின் விளம்பர தூதராகவே நடிகர் விஜய் உள்ளார்.ரசிகர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் என்பதனை மறந்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் இருப்பது சரியா?. குழந்தைகளையும் பாதிக்கும் இந்த காட்சி. திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள் என்றார்.


இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!

கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.வெற்றி நமதே!!!இன்னும் தொடரும்……என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement