• Jul 23 2025

ரஜினி சேர் மற்றும் விஜய் அண்ணா இருவரையும் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியாது- ஒரே போடாக போட்டுடைத்த நடிகர் ஷாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிகர் ஷாம் நடித்துள்ளார்.இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பல்வேறு சேனல்களிலும் பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் அவரிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓபனாக பதில் அளித்துள்ளார். 

அந்த வகையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியது குறித்தும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த், கமல் சார் எல்லாம் லெஜண்ட்ஸ். அவங்க இத்தனை வருஷம் தமிழ் சினிமாவுக்காக எத்தனையோ சாதனைகளை செஞ்சிருக்காங்க.. அவங்களோட லெவலே வேறு, அவர்களுடன் மற்ற நடிகர்களை கம்பேர் செய்வது தவறான விஷயம்னு நான் நினைக்கிறேன் என ஷாம் பேசி உள்ளார்.


ரஜினி சாரையும் விஜய் அண்ணாவையும் கம்பேர் செய்வதே தவறு. ரஜினிகாந்த் சாருக்கு உண்டான மரியாதையை ரசிகர்களாக இருக்கட்டும் திரைத்துறையினராக இருக்கட்டும் அனைவரும் கொடுக்கணும் என ஷாம் பேசி உள்ளார்.


ரஜினிகாந்த், கமலை விட்டுட்டு பார்த்தோம் என்றால் இப்போதைக்கு இருக்கிற சூழலில் விஜய் அண்ணாவுக்கும் அஜித் சாருக்கும் பெரிய ஃபேன் பேஸ் இருக்கு.. இருவரையுமே சூப்பர் ஸ்டார்னு சொல்ல முடியாது. ப்ரிவியஸ் ஃபிலிம்ஸ் ரெக்கார்டு, பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் வச்சுத்தான் பேசுறாங்க.. அதனால் ரஜினி சாரோட கம்பேர் பண்றது சரியானது கிடையாது என ஷாம் அழுத்தம் திருத்தமாக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement