• Jul 24 2025

ஜெயிலர் படம் பார்த்துட்டு ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக திட்டுவாங்க…பிக்கபாஸ் பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினி தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில், மோகன் லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். 

அத்தோடு இப் படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருவதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்று தான் கூற வேண்டும்.



இதற்கிடையில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரவணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” ஜெயிலர் படம் பார்த்து ரஜினி சார் ரசிகர்கள் என்னை கண்டிப்பாக திட்டுவார்கள்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சரவணன் ” நான் ரஜினி சாரோட தீவிர ரசிகன் ஆனால் இன்னும் அவருடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்ற கவலை எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

நானே நெல்சனிடம்  கால் செய்து ஜெயிலர்  படத்தில் எனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஓகே நான் நடிக்கவேண்டும்.  எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள் என வாய்ப்பு கேட்டேன். அவரும் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.அத்தோடு ரொம்ப பெரிய கதாபாத்திரம் இருக்கிறது சின்ன கதாபாத்திரம்.தான் ஆனால் என்னுடைய கதை பாத்திரத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் சில ரசிகர்கள் என்னை திட்டுவார்கள். 



மேலும் நான் ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் . எனவே நெல்சன் எனக்கும் தெரியும் என்பதால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நான் அவரிடம் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவ்வளவு கொடூரமான கதாபாத்திரத்தில்-ஆ  நீங்கள் ஜெயிலர் படத்தில்  நடித்திருக்கிறீர்கள்..?  என்று அதிர்ச்சியுடன்   கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement