• Jul 24 2025

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி... பார்த்திபன் கேட்ட அதிரடிக் கேள்வி... வைரலாகும் ட்விட்டர் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


அந்தவகையில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் "இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.#தமிழன்டா தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.


ரஜினிகாந்தின் இந்தப் பதிவிற்கு பார்த்திபன் செய்துள்ள பதிவு விவாதமாக மாறி உள்ளது. அதாவது அப்பதிவில் "ரஜினி சார், உங்களுக்கு போன் செய்து ட்வீட் செய்ய உத்தரவிட்டது யார் சார்?" என பதிவு செய்திருக்கின்றார். இதற்கு ரஜினிகாந்த் என்ன பதில் அளிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement