• Jul 24 2025

முதல் காதல் தோல்வியின் போது கதறி அழுத ரஜனி... அந்த பெண்ணை பார்க்க தான் உயிருடன் வாழ்கிறாராம்...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக  இருப்பவர் ரஜினி. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்தின் நண்பரும் பிரபல மலையாள திரையுலகின் இயக்குநர், நடிகருமான ஸ்ரீவாசன், ரஜினியின் முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இதில் " ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கியுள்ளனர்.


இதன்பின், ஒரு நாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என்று அந்த பெண்ணை ரஜினிகாந்த் அழைத்துள்ளார்.அத்தோடு  நாடகத்தில் ரஜினியின் நடிப்பை கண்டபின் அந்த பெண் ஷாக்காகியுள்ளார்.

இதன்பின் ஒரு பிலிம் இன்ஸ்ட்யூட் ஒன்றில் ரஜினியை சேரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் கொடுத்த தெரியத்தினால் தான் ரஜினி பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்தார்.

ஆனால், பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி திகைத்துப்போய் நின்றபொழுது, அந்த பெண் தான் ரஜினிக்கு பணம் கொடுத்து உதவினார். ஆனால், திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார்.

ரஜினிகாந்த் கதறி அழுதார். அத்தோடு நான் வாழ்வதற்கு ஒரே காரணம் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக தான் என்று ரஜினி கூறினார் " என இவ்வாறு ஸ்ரீவாசன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

Advertisement

Advertisement