• Jul 25 2025

40 வருட சினிமா வாழ்க்கையில் பிரபல நடிகையை ஒதுக்கி வரும் ரஜினி...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80-களில் பொருத்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  நடிகையாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர ரோலில் பட்டையை கிளப்பி வரும்  வருபவர் நடிகை ரேணுகா. கே பாலச்சந்தர் அவர்களின் கையளவு மனவு தொலைக்காட்சி சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேணுகா, தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வந்தார்.

75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் இருப்பது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.


40 வருஷமா நடிக்கிறீங்க, இந்த நடிகரோட நடிக்க முடியலையேன்னு வருத்தபட்டிருக்கீங்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பா இருக்கு எத்தனை நடிகர்ளுடன் நடித்திருக்கிறேன், ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்பொழுதும்  இருக்கிறது.

கமல் ஹாசனுடன் நடித்திருக்கிறேன். ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க முடியாமல் போனது வருந்தம் தான்.


அத்தோடு அஜித், விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனது. கே பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகையாக இருந்தாலும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை ரேணுகா வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.





Advertisement

Advertisement