• Jul 23 2025

ரசிகர்களுக்கு சோறுகூட போடாதவர் ரஜினிகாந்த்- ஜெயிலர் ரிலீஸ் நேரத்தில் வச்சு செய்யும் ப்ளூ சட்டை..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனியூர் யூடியூப் சேனல் மூலம் தமிழில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சித்து வரும் பிரபலம் தான் ப்ளூ சட்டை மாறன்.அவரது விமர்சனத்துக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேசமயம் விமர்சனத்தில் எல்லை மீறி செல்வதாகவும் பலர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருவதுமுண்டு.

சமீபகாலமாக இவர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகின்றார்.ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா, பருந்து கதையிலிருந்து ரஜினியை பருந்து என்றே அழைத்து வருகிறார் மாறன். அத்தோடு மது அருந்தவேண்டாம் என்று சொல்லி விட்டு தனது சொந்த இடத்திலேயே மது விடுதி நடத்தி வருகின்றார் என்றும் விமர்சித்தார்.

தற்போது ப்ளூ சட்டை மாறன் ரஜினிக்கு எதிராக மற்றொரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,ரஜனி தன்னுடைய இளைய மகளின் திருமணத்திற்கு ரசிகர்களை வரவேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.இதனை தற்பொழுது மாறன் கலாய்த்துள்ளார்.


அதாவது, தனது இளைய மகளின் முதல் திருமணத்தின்போது மகள் திருமணத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம் என ரஜினி அறிவித்திருந்தார். அதேபோல் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர்களிடம் மதுரை ரசிகர்களுக்கு கறிசோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டப சைவ மண்டபம் என ரஜினி கூறியிருந்தார்.

 இதனை மறைமுகமாக குத்தி காண்பித்து ரசிகர்களுக்கு சோறுகூட போடாதவர் ரஜினிகாந்த் என ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement