• Sep 10 2025

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து... ரஜினிகாந்த் மனைவி மீது உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இந்தப் படத்தினுடைய தயாரிப்புக்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். 


இதற்காக தயாரிப்பாளர் முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்தார். குறித்த கடனைத் திரும்ப செலுத்தாமையினால் கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூர் சிவில் கோர்ட்டில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது ஆட் புரு அன்ட் மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.


இந்த விவகாரம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் லதா ரஜினிகாந்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் லதா ரஜினிகாந்த்திற்கு எதிரான வழக்கில் 2பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ததை எதிர்த்து குறித்த தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement