• Jul 25 2025

தமிழிடம் நான் தான் உன் அப்பா என்ற உண்மையைச் சொன்ன ராம்- எதிர்பாராத திருப்பங்களுடன் கண்ணே கலைமானே சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது.இந்த சீரியலில் தற்பொழுது பாணு தான் தன்னுடைய மனைவி என்ற விடயம் ராமுக்கு தெரிந்து விட்டது.


இதனால் பாணுவுக்கு தேவையானவற்றை எல்லாம் அவரது அண்ணா அண்ணி மூலம் ராம் தான் செய்து வருகின்றார்.இப்படியான நிலையில் பாணுவின் மகள் தமிழ் வயதுக்கு வந்ததால் ராம் தான் பாணுவுக்கு தெரியாமல் கொணடாடி வருகின்றார்.


ஆனால் இடையில் பாணுவின் மாமன் ஒருவர் குடித்து விட்டு பங்சன் நடக்கும் இடத்தில் வந்து கலாட்டா பண்ணுவதோடு பாணுவுக்கு புருஷன் யார் என்றே தெரியாது என்று அசிங்கப்படுத்துகின்றார். இந்த அசிங்கத்தை தாங்க முடியாமல் தமிழ் அப்பாவைத் தான் கண்டு பிடிக்கப் போவதாக கூறி மண்டபத்தை விட்டு கிளம்புகின்றார்.


தமிழைக் காணவில்லை எனத் தேடி வந்த ராம் தமிழைக் காண்கின்றார்.அப்போது தமிழ் அப்பா யாரென்று தெரிந்தால் தான் வீட்டுக்கு வருவேன் இல்லா விட்டால் வரமாட்டேன் என்ற சொல்ல ராம் தமிழிடம் நன் தான் உன் அப்பா என்று சொல்ல தமிழ் அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement