• Jul 25 2025

ஆஸ்கார் விருதிற்கு சென்ற ஆடையின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ராம்சரண்- வாவ்... சூப்பரா இருக்கிறீங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இதில், ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

 சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியா சார்பில் தேர்வு செய்யப்படாத ஆர்ஆர்ஆர் படத்தை, தயாரிப்பு தரப்பினர் தனியாக ஆஸ்கருக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி மொத்தம் 15 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர், இறுதியாக ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த நிலையில் இந்த ஆஸ்கார் விருது விழாவிற்காக நடிகர் ராம்சரண் தனது மனைவியுடன் சென்றிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக அணிந்திருந்த ஆடைகள் எப்படி உருவாக்கப்பட்டது. எப்படி தம்மை அலங்கரித்துக் கொண்டு சென்றார்கள் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement