• Jul 24 2025

23 வருடத்துக்கு பிறகும் ரஜினியை அதே வார்த்தை சொல்லி வாழ்த்திய ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து - இது தான் ஹைலைட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினி காந்த்  கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இது இவருடைய169 படமாகும். அத்தோடு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.


இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளைக் கொண்டி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்ககள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜெயிலர் படக்குழுவினரும் தமது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அதில் 23 வருஷத்துக்கு அப்புறம் இந்த டயலாக் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறி என்னுடைய படையப்பா இப்போது என்னுடைய ஜெயிலர் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 மேலும் வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்களை விட்டு போகல’ என்ற வசனத்தையும் அவர் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.

Advertisement

Advertisement