• Jul 25 2025

வெறித்தனமா வெர்க்கவுட் பண்ணும் ரன்பீர் கபூர்- ஷாக்கான ஜிம் மாஸ்டர்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் கபூர்.இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.


தொடர்ந்து படப்பிடிப்புக்களில் பிஸியாக இருந்து வரும் ரன்வீர் கபூர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


ரன்பீர்  முதன்முறையாக இப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும்  ரன்பீரின் போஸ்டர் வெகுசீக்கிரத்தில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. இப்படியான நிலையில் ரனபீர் கபூரின் ஜிம் மாஸ்டர் ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது ரன்பீர் கபூர் ரொம்ப ஒழுக்கமாக இருப்பார். குறிப்பாக வேர்க்கவுட்டை சூப்பராக பண்ணிட்டு இருப்பாரு. சூட்டிங் இருந்திச்சு என்றால் காலைல 4 மணிக்கே எழும்பி ஒர்க்கவுட் பண்ணுவாரு அவருடைய கடின உழைப்புத் தான் இப்படி உடலை பிட்டாக வைத்திருப்பதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். விரைவில் அனிமல் படத்தின் லுக்கிலும் புகைப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement