• Jul 24 2025

ரசிகருக்காக நடுரோட்டில் காரை நிறுத்திய ரன்பீர்-எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு!

stella / 3 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கரண் மல்கோத்ரா இயக்கத்தில் 150 கோடி பட்ஜெட்டில் ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “ஷம்ஷீரா”. இப்படம் கடும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனலாம்.

ஷம்ஷீரா வெளியாகி உள்ள நிலையில், ரன்பீர் கபூரின் கார் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அதனை ரசிகர் ஒருவர் சேஸ் செய்ய, உடனடியாக அவருக்காக நடு ரோட்டில் காரை நிறுத்தி, கார் கண்ணாடியை இறக்கி ரசிகருடன் சில நொடிகள் உரையாடி விட்டு ரன்பீர் கபூர் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

தனது புதிய படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக போகவில்லை என்பதை அறிந்து கொண்ட நிலையில், உடனடியாக இப்படியொரு வீடியோ டிரெண்டாவதே புரமோஷன் உத்தி தான் என்றும் இதற்கு முன் ரன்பீர் கபூரை யாருமே அவர் காரில் செல்லும் போது சேஸ் செய்து கொண்டு சென்று பேசியது இல்லை என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஷம்ஷீரா படத்தை விட பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷம்ஷீரா படம் சொதப்பிய நிலையில், அந்த தாக்கம் பிரம்மாஸ்திரம் படத்தையும் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement