• Jul 26 2025

"ரஞ்சிதமே பாடலுக்கு சொந்தக்காரர் என் புருசன் தான்"-பாட்டை வாங்கிறவங்களே சான்ஸ் கொடுக்கிறாங்க இல்ல- குமுறும் அனிதா குப்புசாமி

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு என்று எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம் கலந்து கொள்வதால் புஷ்பவனம் குப்புசாமியால்  திரையுலகில் அதிகம் பின்னணி பாடல்களை பாட முடிவது இல்லை. 


இந்நிலையில் இவரின் மனைவியான அனிதா குப்புசாமி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. அதாவது ரஞ்சிதமே பாடலுக்கு கிடைத்த பெருமை எல்லாம் தன்னுடைய கணவருக்கே சேரும் எனக் கூறி இருக்கின்றார் அனிதா.


ஏனெனில் அந்தப்பாட்டு 98இல் வந்த மொச்சைக் கொட்டைப் பல்லழகி, மற்றும் 89இல் வெளிவந்த தஞ்சாவூர் மண்ணு எடுத்து என்ற பாடல்களின் சாயல்களில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் தஞ்சாவூர் மண்ணு எடுத்து என்ற பாடலைப் பாடிய என் கணவருக்குத் தான் அந்தப் பெருமை எல்லாம் எனக் கூறியிருக்கின்றார் அனிதா குப்புசாமி.


மேலும் "என் வீட்டுக்காரருக்கு கிடைத்த பெருமை எல்லாம் கிராமத்திலிருந்து தான் கிடைத்தது, என் கணவர் கூட இது நம்ம பாட்டு" எனக் கூறியிருப்பதாகவும் அனிதா சொல்கிறார். அத்தோடு அந்த மெட்டு மொச்சைக் கொட்டைப் பல்லழகி, சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே, ரஞ்சிதமே மாதிரி கிட்டத்தட்ட 10 பாட்டிற்கு மேல் உருவாக்கி இருப்பதாகவும் கூறுகின்றார்.


அதுமட்டுமல்லாமல் "அந்தப் பாட்டோட டியூனுக்கு எல்லாம் சொந்தக்காரர் நம்மாளு" எனவும் கூறிப் பெருமைப் படுகின்றார் அனிதா. மேலும் "நான் இதை எல்லாம் பார்த்திட்டு எத்தனை காலத்திற்கு இப்படி கொடுத்திட்டே இருப்பீங்க என என் கணவரிடம் கேட்டிருக்கேன், அதற்கு அவர் மனுஷன் காய்ந்தாலும் கிராமத்து மனுஷனோட மண்டை காயாது, எத்தனை டியூன் வேணும் என்றாலும் நான் கொடுப்பேன்" எனக் கூறுவார்.


டியூனை வாங்கிக் கொண்டு போறவங்க சுதியோட பாடுறதற்கு என் கணவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் எவ்வாவு நல்லா இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் அனிதா குப்புசாமி. அவருக்கு அந்த சான்ஸ் கொடுக்காமைக்கான காரணம் அந்த டியூனுக்கு சொந்தக்காரர் இவர்தான் என்று தெரிஞ்சிடும் அதனால தான் எனவும் கூறி இருக்கின்றார். அதேபோல் இளையராஜா சேர் பண்றது கூட தப்பு என்று நான் சொல்ல மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கின்றார் அனிதா.

எது எவ்வாறாயினும் ரஞ்சிதமே பாடலுக்கு சொந்தக்காரர் என்னோட வீட்டுக்காரர் தான் என அனிதா கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதனால் இவர் கூறிய இந்த விடயத்தினை சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement