• Sep 11 2025

காதலர் நரூட்டோவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா... அவரே கூறிய உண்மை... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இதுவரை பேசியது இல்லை. இருப்பினும் அவர்கள் பற்றிய கிசுகிசு தொடர்ந்து வந்துகொண்டு தான் உள்ளது. இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.


இவ்வாறான கிசுகிசுக்களுக்கு மத்தியில் ராஷ்மிகா சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப் உடன் இணைந்து பாலிவுட் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்தப் பேட்டியின் போது அவரிடம் "நீங்க நரூட்டோவை ரகசிய திருமணம் செஞ்சுகிட்டீங்களாமே, அது உண்மையா" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 


இந்தக் கேள்விக்கு ராஷ்மிகா பதிலளிக்கையில் "ஆமாம் நான் அவரைத் திருமணம் செய்து விட்டேன், என் இதயமே நரூட்டோவுக்கு தான், எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரமே அதுதான். அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்துகொண்டேன்" எனக் கூறியுள்ளார்.


அந்தவகையில் இதில் நரூட்டோ என ராஷ்மிகா குறிப்பிட்டிருப்பது  ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை ஆகும். இந்தக் கதாபாத்திரம் அவரை மிகவும் கவர்ந்திருக்கின்றது. இவர் ஒரு முறை இன்ஸ்டாகிராம் பதிவில் நரூட்டோ பொம்மையை முத்தமிட்டவாரு, இதுதான் என்னுடைய லவ்வர் என குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்தே நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரஷ்மிகாவிடம் அந்தக் கேள்வியை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எது எவ்வாறாயினும் நரூட்டோ என்பது கார்ட்டூன் கதாபாத்திரம் என்பதை தெரியாத ஒரு சில ரசிகர்கள் ராஷ்மிகா ரகசியத் திருமணம் செய்து விட்டார் என நினைத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

Advertisement

Advertisement