• Jul 25 2025

வீடு திரும்பிய ராஷ்மிகாவை வழிமறித்த ரசிகர்கள்... வண்டியை நிறுத்தி அவர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி படு பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி, ஏகப்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் விஜய் வழமை போன்று மிகவும் சிம்பிளாக உடையணிந்து வந்திருந்தார். அதுமட்டுமல்லாது விஜய் மிகவும் கூலாக சூப்பராக பேசியிருந்தார், அதிலும் அவர் ரசிகர்களுக்கு கொடுத்த முத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.


இந்நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்த நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது அவரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் பைக்கை நிறுத்தி ராஷ்மிகாவை வழிமறித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து காரை நிறுத்திய நடிகை ராஷ்மிகா தயவுசெய்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு பைக்கை ஓட்டுங்கள் என்று அவர்களுக்கு அட்வைஸ் கூறி கிளம்பியுள்ளார். அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement