• Jul 25 2025

வெளியானது ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வர ராவ்' திரைப்படத்தின்... 'இவன்' பாடலினுடைய ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அந்தவகையில் ஆக்‌ஷன் காமெடி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ரவி தேஜா . தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது இவருடன் காயத்ரி பரத்வா நடித்துள்ள 'டைகர் நாகேஸ்வர ராவ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


ஒரு நல்ல ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இத்திரைப்படத்தின்  'இவன்' பாடலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 'இவன்' பாடலை அருண்ராஜா காமராஜ் மற்றும் திவாகர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்துள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' பாடலின் 'இவன்' பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.


இந்த திரைப்படத்தில் நூபுர் சனோன், ரேணு தேசாய், அனுபம் கெர், நாசர், முரளி சர்மா மற்றும் ஜிஷு சென்குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி தேஜா மற்றும் காயத்ரி பரத்வா நடித்த 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தின் 'இவன்' பாடல் செம மாஸாக உள்ளத்து . ரவி தேஜாவின் ரசிகர்கள் அடுத்து வெளிவர இருக்கும் இவரின் திரைப்படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர் .


இதோ அந்த பாடலின் ப்ரோமோ  வீடியோ.


Advertisement

Advertisement