• Jul 25 2025

அஜித்துடன் படம் பண்ண ரெடி, ஆனா – வாரிசு பட தயாரிப்பளார் தில் ராஜு போட்ட கண்டிஷன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வரும் 11ஆம் தேதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் என பலர் நடடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி உள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கி, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இப்படம் 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது. அதோடு ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனமும் சென்னையில் 5 இடங்களில் வெளியிடுகிறது

இவ்வாறுஇருக்ரகயில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வார்சுடு திரைப்படம் தமிழுடன் ஒரே நேரத்தில்தான் உருவாக்கியது. அப்படிபட்ட நிலையில் கடந்த சில மாதனங்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. இது சர்ச்சையாகிய நிலையில் இதற்கு வாரிசு படம் தமிழ் படம் என்றும் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறினார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.

நடிகர் விஜய்யின் தொடக்க கால சினிமாவில் அப்பா செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட், காதல், குடும்பம் என்று கதையை மையமாக கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது அரசியல், விவசாயம், தீவிரவாதம் போன்ற சமூக பிரச்சனைகளை சொல்லும் கதைகளில் நடித்து வருகிறார். இதனால் விஜய் குடும்ப படங்களில் நடிக்காதது ஒரு குறையாகவே விஜய் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

அத்தோடு இந்த நிலையில் அந்த குறைகளை போக்கும் படியாக வம்சி இயக்கத்தில் தரமான குடும்ப படமான வாரிசில் நடித்துள்ளார் விஜய் அதோடு வாரிசு படத்தில் ட்ரைலரை வைத்து பார்த்தால் தொழிலதிபராக இருக்கும் விஜய் குடும்பம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. இதனை விஜய் சரிசெய்வதாக உள்ளது. எனவே பழைய குடும்ப சென்டிமென்ட கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வாரிசு திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் இதன் தெலுங்கு படமான வாரிசுடு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மொழியில் வெளியாகும் வாரிசுடு திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகுமென்று தெரிவித்துள்ளார். அத்தோடு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலைய்யா நடித்த வீர சிம்ம ரெட்டி படம் வரும் 12ஆம் தேதியும், சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படம் 13ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

எனவே இதனால் தான் வாரிசு திரைப்பம் 14 ஆம் தேதி ஆந்திராவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலளித்த தில் ராஜு தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பட ஹீரோக்களில் படங்களை மட்டும்தான் முதலில் பார்க்க வேண்டுமென்பதில்தான் வாரிசு 14ஆம் தேதி வெளியாகிறது என்று கூறினார். மேலும் அஜித்துடன் இணைத்து படம் எடுப்பீர்களா என்று பத்திரிகையாளர் கேள்விக்கு. நல்ல திரைக்கதை கிடைத்தால் கண்டிப்பாக அஜித் குமார் சாருடன் இணைவேன் படம் செய்வேன் என்று கூறினார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement