• Jul 25 2025

தீவில் இருப்பதை உணர்ந்த வெற்றி... மயக்கம் போட்டு கீழே விழுந்த அபி... பரபரப்பான திருப்பங்களுடன் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெற்றியும், அபியும் ரவுடிக் கும்பலிடமிருந்து தப்பி உள்ளனர். அந்த சமயத்தில் அபி "நாம ரவுடிக் கும்பலிடமிருந்து தப்பி கரைக்கு வந்திட்டோம், உனக்கு சமதோஷமாக இல்லையா ஏன் இப்படி உர்றென்று இருக்காய்" எனக் கேட்கின்றார்.


அதற்கு வெற்றி "நாம இன்னும் கரைக்கு வரல, ஏதோ ஒரு தீவில் வந்து ஒதுங்கியிருக்கோம் என நினைக்கின்றேன்" என்கிறார். அதனைக் கேட்டதும் அபி அதிர்ச்சியில் உறைந்து மயங்கி விழுகின்றார். பின்னர் அபியைத் தூக்கிய வெற்றி அங்கிருந்து நடந்து செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.  


Advertisement

Advertisement