• Jul 26 2025

பிரம்மாண்ட படத்தின் விற்பனை உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

stella / 3 years ago

Advertisement

Listen News!

அரசியல்வாதியாகவும் நடிகராகவும் விளங்கும் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் நிறுவனத்தின் மூலம் படங்களின் விற்பனை உரிமையை வாங்கி வருகின்றார். அந்த வகையில் புத்துணர்வுடன் நேர்மையாக எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் படங்களை வெளியிட்டு வருவதால் தான் பெரிய படங்களை அந்த பேனரில் வெளியிட கொடுக்கிறோம் என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

மாமன்னன் படத்தில் பிசியாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் படங்களின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புரமோஷன் செய்து வருகிறார்.

அந்த வகையில் விரைவில் வெளியாக உள்ள சந்தானத்தின் குலுகுலு, சியான் விக்ரமின் கோப்ரா, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் தீபாவளி ரிலீசான சர்தார் படம் வரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது.

இந்நிலையில், இன்னொரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக போகிறது என்று கூறப்படுகின்றது. இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படமா? அல்லது அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த படத்தில் குறிப்பாக பயன்படுத்தப்படும் இறகு இந்த அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் வெளியீட்டு உரிமை பற்றிய அறிவிப்பாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement