• Jul 24 2025

நானே வருவேன் திரைப்படத்தின் ரெண்டு ராஜா செக்கண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தான்  நானே வருவேன்.இப்படம் 29ம் திகதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 சைக்கோ க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்தினை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


நானே வருவேன் படத்தில் இருந்து ஏற்கனவே 'வீரா சூரா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் தற்போது செகண்ட் சிங்கிள் டிராக்கான 'ரெண்டு ராஜா' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷே எழுதியுள்ளார்.

 இருவரது வாய்ஸிலும் செம்ம தாறுமாறாக உருவாகியுள்ள ரெண்டு ராஜா பாடல் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. நானே வருவேன் படத்தின் கதையை சொல்லும் விதமாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement