• Jul 24 2025

குடும்பத்தினரால் தொடர்ந்து காயப்படுத்தப்படும் ரேனு- திடீரென என்ட்ரி கொடுத்த ரேனுவின் அம்மா- Kizhakku Vaasal Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கிழக்கு வாசல்.வெங்கட் மற்றும் ரேஷ்மா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். அத்தோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகின்றார்.

இவர்களுடன் தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரேனுவின் இரண்டாவது அண்ணி கர்ப்பமாக இருப்பதா அவரது இரண்டாவது அண்ணன் வந்து சொல்கின்றார். இதனால் ரேனு ஒரு பொம்மை செய்து கொண்டு வந்து கொடுக்கின்றார். 


அப்போது அவரது அண்ணன் ரேனு கொண்டு வந்து கொடுத்த பொம்மையை நீ தினமும் பார்க்கனும் என்று சொல்ல, அவர் அவளுடைய அம்மா யாரென்றே தெரியாது இதை தினமும் பார்த்து எனக்கு குழந்தை பிறந்தால் அதுவும் அவள மாதிரி ராசி இல்லாமல் இருக்கும் என்று சொல்ல ரேனு இதைக் கேட்டு விட்டு தனது ரூமுக்குள் சென்று அழுகின்றார்.

அத்தோடு எங்க இருக்கிற அம்மா உன்னை நான் எப்படிக் கண்டு பிடிப்பேன் என் சொல்ல, சமூக சேவகர் என்ற பொறுப்பில் பாஞ்சாலி என்னும் ஒருவர் இருப்பதாக அவருடைய அம்மாவைக் காட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement