• Jul 25 2025

முதன்முதலாக தனது திறமையை வெளிப்படுத்திய ரேணுகா- சந்தோஷத்தில் இருக்கும் நந்தினி- விறுவிறுப்பாக நகரும் எதிர்நீச்சல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல்' சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக தற்போது குணசேகரனுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாமல் போன நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளார்.

குணசேகரனுக்கு, பிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் உரிய சிகிச்சைகள் எடுத்தால் ஒரு வேலை அவரின் கை கால்கள் சரியாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே நேரம் சரியாகாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.


இப்படியான நிலையில் குணசேகரன் தன்னுடைய சொத்தை எப்படியாவது ஜீவானந்தத்திடம் இருந்து பறிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்.இதனால் ஜனனி ஒருபக்கமும் குணசேகரன் ஒருபக்கமுமாக ஜீவானந்தம் யார் என்பதை அறிய முயற்சி செய்து வருகின்றனர். குணசேகரனும் கதிரும் இதற்காக சென்னைக்கு கிளம்பிச் சென்று விட்டனர்.

இப்படியான நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் ரேணுகா முதன்முறையாக தனக்குத் தெரிந்த நாட்டியக்கலையை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார். தனது திறமையை ரேனுகா வெளிப்படுத்தியதைப் பார்த்து நந்தினியும் சந்தோஷப்படுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement