• Jul 26 2025

பாக்கியலட்மி சீரியலில் இருந்து ரேஷ்மா விலகுகின்றாரா?- புது சீரியலால் எடுக்க போகும் முடிவு என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இவர் இதற்கு முதல் வேலை என்று வந்திட்டால் வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இது தவிர சில திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கின்றார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொணடதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.


மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்தால் ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது இவர் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் வெயிட்டான கதாபாத்திரம் கொண்ட வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


வெகு விரைவில் ஷு தமிழ் தொலைக்காட்சியின் இந்த புத்தம் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது விலகிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement