• Jul 26 2025

"நிம்மதியாக ஓய்வெடுங்கள் சார்"... மாரடைப்பால் மரணமடைந்த நடிகருக்கு பிரித்விராஜ் இரங்கல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நகைச்சுவை நடிகரான மாமுக்கோயா இன்றைய தினம் காலமானார். அவருக்கு தற்போது வயது 76. மாரடைப்பினால் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் இன்று மதியம் 1.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். 


இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்பு நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.


இந்நிலையில் தற்போது நடிகர் பிரித்விராஜ் இவரின் இறப்பிற்கு தன்னுடைய இரங்கலினைத் தெரிவித்திருக்கின்றார். அதாவது "நிம்மதியாக ஓய்வெடுங்கள் மாமுக்கோயா ஐயா! உங்களுடன் பல முறை திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் முழுமையான பாக்கியம் கிடைத்தது. ஆனால் உங்களை இவ்வளவு நெருக்கமாக பார்ப்பது நான் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் ஒரு நினைவாக இருக்கும்" என மிகவும் உருக்கமாகப் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement