• Jul 25 2025

மீண்டும் இணைந்த அப்பா மகள் கூட்டணி- ஸ்ருதிஹாசனுடன் கமல்ஹாசன் செய்த சேட்டை- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி பல்வேறு சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது அமைந்தது. இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார்.

மேலும் கமல் இதற்கு முதல்  கடந்த 1986-ம் ஆண்டும் விக்ரம் என்கிற படத்தில் நடித்திருந்தார்.அப்படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் குரலில் விக்ரம்... விக்ரம் என ஒலிக்கும் தீம் மியூசிக் மிகவும் பேமஸ் ஆனது. அந்த தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் பயன்படுத்தி இருந்தார் அனிரூத். 


அந்த ரீமிக்ஸ் செய்யப்பட்ட தீம் மியூசிக்கிற்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த ரீல்ஸ் வீடியோவில் ஸ்ருதிஹாசன், இளையராஜா இசையமைப்பில் உருவான விக்ரம் பட தீம் மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்,

 இறுதியாக கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இந்த கியூட் வீடியோ பார்த்த ரசிகர்கள் கமல் குழந்தையாகவே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement