• Jul 23 2025

கணவனுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய ரித்திகா- அதுவும் எங்கு தெரியுமா..? தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல்  நடிகை ரித்திகா சில நாட்களுக்கு முன் தனது நெருங்கிய ந்பர்களுடன்  திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை சில நாட்களுக்கு முன் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்  கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த பின்னர் கணவருடன்  சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ரித்திகா, "கடவுளின் ஆசிர்வாதத்துடன் வினு நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனி, தான் திருமதி.வினு ஆகிவிட்டதாகவும் பதிவிட்டு, அனைவரின் அன்பும் ஆசியும் தங்களுக்கு வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

அத்தோடு பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா அதன் பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

கணவர் வினுவுடன் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ள ரித்திகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தனது கணவருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement