• Jul 26 2025

என் நிறுவனத்திற்கு அவளோட பெயரைத் தான் வைக்கப் போறன்.. பிக்பாஸ் பிரபலத்தின் பெயரைக் கூறிய ராபர்ட்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பலரும் பல வழிகளிலும் முன்னேறி உள்ளார்கள். அதாவது பாடல், நடனம், நடிப்பு, வரிகள் எனப் பல திறமைகளினை  வெளிப்படுத்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கின்றார்கள்.


அவ்வாறான ஒருவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் விஜய், சிம்பு உட்படப் பல முன்னணி ஹீரோக்களை வைத்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதுமட்டுமல்லாது தற்போது இடம்பெற்று வருகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றார்.


அதாவது இவர் பிக்பாஸ் 6ஆவது சீசனிற்குள் நுழைந்ததும் இவர் குறித்து நமக்கு தெரியாத பல விஷயங்களை வெளியே கூறி இருக்கின்றார். அத்தோடு இந்த சீசனில் இவர் நன்றாக விளையாடுவார், இறுதி 5போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுவார் என்றெல்லாம் மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஆனால் அதற்கு மாறாக ராபர்ட் மாஸ்டரின் கவனம் ரச்சிதா மீது செல்ல விளையாட்டைஒழுங்காக விளையாடாமல் மிஸ் செய்து வந்தார். இதனால் குறைந்த வாக்குகளை அளித்து மக்கள் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.


பிக்பாஸை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் தற்போது அடிக்கடி பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்தவகையில் ஒரு பேட்டியில் பேசும்போது "நான் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி பெயரை தான் வைக்கப்போகிறேன், அவளை நிஜமாகவே நான் எனது பெண்ணாக தான் நினைக்கிறேன்" எனக் கூறி இருக்கின்றார்.


அத்தோடு "எனது காதலி மூக்குத்தி போட்டிருப்பார், அதேபோல் ரச்சிதாவும் போட்டிருந்தார். அதனால் எனக்கு பிடிக்க அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்" எனவும் அப்பேட்டியில் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement