• Jul 25 2025

தன்னுடைய திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரோபோ ஷங்கரின் மகள்- எப்போது தெரியுமா?- மணமகன் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான்  ரோபோ சங்கர். இவர் தனுஷ்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, அஜித், சூர்யாபோன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், மஞ்சள் காமாலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மிகவும் ஒல்லியாக மாறிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 


ஒருவழியாக உடல் நலம் தேறி மீண்டும், திரைப்படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளார். அவ்வப்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.


ரோபோ சங்கர் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமோ... அதே அளவிற்கு, அவன் மனைவி ப்ரியங்கா மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் மிகவும் பிரபலமானவர்கள். பிரியங்கா ரோபோ ஷங்கர், தில், கன்னி மாடம் போன்ற சில படங்களில் நடித்துள்ளதோடு, கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானவர்.


பெற்றோரை தொடர்ந்து, இந்திரஜாவும் மிகவும் பிரபலமானவர். தன்னுடைய 16 வயதிலேயே அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த, 'பிகில்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான... 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். 


இந்நிலையில் விரைவில் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே, உறுதி படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்திரஜா தன்னுடைய பெற்றோர் மற்றும் முறைமாமன் குடும்பத்தினரோடு குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார்.


அப்போது தன்னுடைய மாமாவின் பக்கத்தில் நின்று இந்திரஜா போஸ் கொடுத்திருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களின் ஜோடி பொருத்தம் அருமை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேள்வி எழுப்பி வந்தனர்.


இதற்கு பதிலளித்த இந்திரஜா ஆமாம். முடிவு செய்துள்ளார்கள். ஆனால் இன்னும் திருமணத்திற்கு நாள் குறிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement