• Jul 24 2025

புதிய சீரியலில் கமிட்டான ரோஜா சீரியல் கதாநாயகி- இவருக்கு ஜோடி இந்த நடிகர் தானாம்-அபிசியல் அப்டேட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய சீரியல் ரோஜா. இதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா.முதல் சீரியலிலேயே தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அதிலும் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகர் சிப்பு சூர்யன். இவர்கள் இருவரின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்காகவே, பல பேர் அந்த சீரியலை பார்த்தனர். சுமார் ஆயிரத்துக்கு ஐனூறு அத்தியாயத்தை கடந்து ஓடிய சீரியல் சில தினங்களுக்கு முன் தான் முடிவடைந்தது.


அதன் பின் இருவரும் எப்போது புதிய சீரியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஷு தமிழில் புதிதாக வரப் போகும் சீதையின் ராமன் சீரியலில் ஹீரோயினாக பிரியங்கா கமிட்டாகியுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்திருந்தது.


அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது நடிகர் ஜெய் டிஸோசா தான் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவருடைய ஜோடி ஆன் ஸ்கிரினில் எப்படி ஒர்க் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


Advertisement

Advertisement