• Jul 25 2025

ரோஜாவின் மகள், மகன் நடிப்பார்களா... பிறந்தநாள் அதுவுமாய் அவரே கூறிய கலக்கலான பதில் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ரோஜா. இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டிருக்கின்றார். இதனால் தான் ரசிகர்கள் இவரை 'நவரச நாயகி' என சிறப்பாக அழைத்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது இவர் தற்போதைய ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாகவும் இருக்கின்றார். இந்நிலையில் ரோஜா இன்று தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். மேலும் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்திருக்கின்றார். 


அங்கு வைத்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஏழுமலையானை எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது என்றும், மீண்டும், மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். 


அத்தோடு "தன்னுடைய மகன், மகள் ஆகியோர் விருப்பப்பட்டு நடிப்புத் தொழிலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகை ரோஜா தெரிவித்தார். இவ்வாறாக சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement