• Jul 25 2025

சாது மிரண்டால் காடு கொள்ளாது- பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வெளியேறிய ஜீவா அளித்த முதல் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபகாலமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.ஜீவா & மீனா ஆகியோர் திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தால் மனஸ்தாபமாகி வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அது மட்டுமில்லாமல், மீனாவின் தந்தை வீட்டிலும் அவர்கள் இருவரும் குடியேறி உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து  தனது கணவர் கண்ணனை அனைவரும் குற்றம் சுமத்தியதாக அவரது மனைவி ஐஸ்வர்யா சக குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பிப் போய் விட்டார்.இதனால் அடுத்ததாக என்ன திருப்பம் நடைபெறவுள்ளது என்பதனைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஜீவா எனப்படும் வெங்கட் முதன்முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் சாது மிரண்டால் காடுகொள்ளாது என்று சொல்வாங்கல நிறைய நாள் பொறுமையாக இருந்து பார்த்திட்டேன் ஜீவாவை புரிஞ்சுப்பாங்க என்று அது நடக்கல. அதெல்லாம் சேர்த்து தான் கவலையாக வெளியே வந்திடுச்சு.


மாமனார் வீட்டை போனாலும் ஜீவாவினதும் மீனாவினதும் வாழ்க்கை வித்தியாசமாகத் தான் இருக்கும். அவரை சார்ந்து போகிறமாதிரி அமையாது என வெங்கட்டாக நான் சொல்லுறேன். எல்லாம் லேட்டானாலும் மீனா,ஜீவாவின் வாழ்க்கை தனிப்பட்ட முறையில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement