• Jul 24 2025

குலதெய்வம் கோயிலுக்கு பாரம்பரிய உடையணிந்து சென்ற சாய்பல்லவி- யாரெல்லாம் போயிருக்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

 ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்ததன் மூலம் தனது சினிமா கெரியரை ஆரம்பித்தவர் தான் நடிகை சாய் பல்லவி.தொடர்ந்து ஃபிடா என்னும் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


மேலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தார்.இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.


நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.


சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குல தெய்வ கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement