• Jul 24 2025

ஜீவானந்தத்துக்கு பயந்து ஓடிவந்த கதிர், ஞானம்..? கிண்டலிடித்து சிரிக்கும் ரேணுகா... ஜீவானந்தம் பற்றி சக்தி சொன்ன பதில்... 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் கதிர், குணம், சக்தி மூவரும் வருகிறார்கள்.


அப்போது நந்தினி "இவங்க எங்க போய்ட்டுதான் திரும்பி வாறாங்களோ தெரியல" என்கிறார். பதிலுக்கு ரேணுகா "ஒருவேளை ஜீவானந்தத்தை பார்த்து பயந்து ஓடிவாறாங்களோ" எனக் கிண்டலாக கூறுகின்றார். அதனைக் கேட்டதும் கதிர் முறைக்கின்றார். 

பின்னர் ரேணுகா சக்தியிடம் "அவர் எங்க இருக்கார் என்று தகவல் எதுவும் கிடைச்சுதா" எனக் கேட்கின்றார், பதிலுக்கு சக்தி "அவர் எங்க இருக்கார் என்று கேட்டால் ஒரு பயலும் வாயைத் திறக்கிறான் இல்லை" என்கிறார்.  


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement